ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அசின். சமீபத்தில் டெல்லி வந்த ஜேம்ஸ் கேமரூனைச...
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அசின்.
சமீபத்தில் டெல்லி வந்த ஜேம்ஸ் கேமரூனைச் சந்தித்ததுடன், ஒரு செமினாரில் அவருக்கு முன் உரையாற்றும் வாய்ப்பும் அசினுக்குக் கிடைத்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அசின். அனைவரும் பாராட்டும் வண்ணம் பேசி முடித்தாராம். ஜேம்ஸ் கேமரூனும் கைதட்டி பாராட்டியுள்ளார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் கேமரூனைச் சந்தித்துப் பேசினாராம் அசின். அவர்களுடன் நடிகர் அமீர்கானும் இருந்தார். பின்னர் அசின் கூறும்போது, :"ஜேம்ஸ் காமருன் இயக்கும் படம் ஒன்றில் நடிகர் அமீர்கான் நடிக்கிறார். இதில் நான் நடிக்கிறேனா என்பது தெரியவில்லை.
ஆனால் ஜேம்ஸ் காமரூன் போன்ற மேதைகளின் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஜேம்ஸ் காமரூன் இந்தி சினிமா பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். அவர் இங்குள்ள சினிமா பார்முலா பற்றியெல்லாம் என்னிடம் பேசினார்" என்றார்.
Comments
Post a Comment