Bharathiraja on MGR

http://thatstamil.oneindia.in/img/2010/03/07-bharathiraja-200.jpg

நான் அதிகம் படிக்காதவன். எம்ஜிஆர் பேச்சைக் கேட்காமல் போனேன். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் நிறைய பேருக்கு இலவச கல்வி கொடுத்திருக்க முடியும்" என்றார் இயக்குநர் பாரதிராஜா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் கூறியது:

உசிலம்பட்டி பகுதியில்தான், மூதாதையர் வாழ்ந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மிக மிக பழமையானவர்கள், இவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது.

உண்மையான தமிழர்கள், திராவிடர்கள் என்றால் அவர்கள் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள்தான். இவர்களை வழி நடத்த முத்துராமலிங்கத் தேவருக்கு பின்பு ஒரு நல்ல தலைவர் கிடைக்கவில்லை. காரணம், தற்போதுள்ள ஒவ்வொருவரும் நாம்தான் தலைவர் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம்.

அந்த குறையைக் களைந்துவிட்டு ஒருவரின் தலைமையில் ஒற்றுமையோடு செயல்பட்டால், நிச்சயமாக நமக்கு வெற்றி கிடைக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது என்னை ஒரு கல்லூரி தொடங்கச் சொன்னார் தலைவர். ஆனால் அப்போது நான் அதை ஏற்கவில்லை.

நான் ஒரு சினிமா கலைஞன், எனக்கும் கல்லூரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என அலட்சியமாக இருந்துவிட்டேன். ஆனால் அவர் தீர்க்கதரிசி. அது அப்போது புரியவில்லை.

இன்னொன்று கல்வியைப்பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. நான் படிக்காதவன்தான்.

30 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் பேச்சைக்கேட்டு நான் கல்லூரி தொடங்கியிருந்தால் நிச்சயம் மதுரைப் பக்கம்தான் தொடங்கியிருப்பேன். ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைத்திருக்கும். அப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றி எனக்கு புரியவில்லை.

வருங்கால சந்ததிகள் இதை கருத்தில் கொண்டு கல்வியை வாழ்க்கையின் முதன்மையாக கருதி கல்வி கற்க வேண்டும்..." என்றார்.

Comments

Most Recent