அடுத்த படத்தில் பெரிய ஹீரோவை இயக்குகிறேன் என்றார் வெங்கட் பிரபு. இது பற்றி அவர் அளித்த பேட்டி: ‘கோவா’ படத்துக்கு இருவித விமர்சனங்கள் எழுந்...
அடுத்த படத்தில் பெரிய ஹீரோவை இயக்குகிறேன் என்றார் வெங்கட் பிரபு. இது பற்றி அவர் அளித்த பேட்டி: ‘கோவா’ படத்துக்கு இருவித விமர்சனங்கள் எழுந்தன. இதுவரை 3 படங்கள் இயக்கியுள்ளேன். எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று அதில் கற்றுக்கொண்டேன். புதுமையை எதிர்பார்ப்பவர்கள்கூட நடைமுறையில் உள்ள சில உறவுகளைபற்றி காட்டும்போது ஏற்பதில்லை. ‘கோவா’வில் அதுதான் நடந்தது. ‘சென்னை 28’ மாதிரி இன்னொரு படம் தாருங்கள் என்கிறார்கள்.
அப்படியொரு படத்தை தந்தால் ‘‘சென்னை 28’ மாதிரியே இருக்கு’ என்பார்கள். ஒரே கதையை திரும்ப எடுக்க மாட்டேன். அடுத்து இரு கதைகளை எழுதி வருகிறேன். முன்னணி ஹீரோ நடிக்கும் கதை, இளம் ஹீரோக்கள் கதை. ‘3 படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கியதால் அடுத்து, பெரிய ஹீரோ படம் இயக்குங்கள்’ என்று தயாரிப்பாளர் சிவா கூறுகிறார். அவருக்குத்தான் அடுத்த படம் இயக்குகிறேன். பெரிய ஹீரோக்கள் எல்லோருமே பிஸியாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் பேசி வருகிறேன். ஏப்ரல் அல்லது மே மாதம் ஷூட்டிங் தொடங்கும். இவ்வாறு வெங்கட் பிரபு கூறினார்.
Comments
Post a Comment