சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டாமிடம் அங்காடித் தெருவுக்கு. ...
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா. இரண்டாமிடம் அங்காடித் தெருவுக்கு.
5. பாடகசாலை
பாடகசாலை முதல் மூன்று தினங்களில் 2.23 லட்சங்களை வசூலித்து 5வது இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் ஆதரவு இல்லாததால் அடுத்த வாரம் டாப் 5ல் இப்படம் இடம் பெறுவது அரிது.
4. முன்தினம் பார்த்தேனே
புதுமுகங்களின் முன்தினம் பார்த்தேனே டீசண்டான லவ் ஸ்டோரி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. சென்ற வார இறுதியில் 2.39 லட்சங்களை வசூலித்த இப்படம் பத்து நாள் முடிவில் 17 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
3. கச்சேரி ஆரம்பம்
ஜீவாவின் கச்சேரி எதிர்பார்த்த அளவுக்கு களைகட்டவில்லை. விளைவு... சென்ற வார இறுதியில் 13 லட்சங்களையே இப்படத்தால் வசூலிக்க முடிந்துள்ளது. இதன் பத்து நாள் சென்னை வசூல் 54 லட்சங்கள்.
2. அங்காடித் தெரு
விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் பாராட்டப்படும் வசந்தபாலனின் அங்காடித் தெரு வெளியான மூன்று தினங்களில் ஏறக்குறைய 25 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பத்திரிகைகளின் பாஸிடிவ்வான விமர்சனம் அடுத்தடுத்த தினங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.
1. விண்ணைத்தாண்டி வருவாயா
வெளியான நாள் முதல் அதே முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா. இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 34.1 லட்சங்களை வசூலித்துள்ளது. நான்கு வார முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 4.65 கோடிகள். இந்த வருடப் படங்களில் இதுவே அதிகபட்ச சென்னை வசூல்.
ஏப்ரல் 2ஆம் தேதி பையா வெளியாவதால் அடுத்தவார பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment