Enthiran secret shooting

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4uhUyOT3l0pzSZQg4JduAkMZnZ2R7AU-P85-KiJQWzbxnbvsv_Lw1OXE9ko20mpDrHSVQqkvI15V6vo5IjcalGiA7Il9ukvgG-3kE6OAU5PFe2HNti5Cg1Lgl3ohYbjIHb6QJRYKjRZ0/

இந்தியாவே மூக்கில் விரல் வைக்கும்படி இருக்கும் எந்திரன் என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர். ஷங்கர் தனது ப்ளாக்கில் எந்திரன் பற்றி கோடிட்டுக் காட்டும் விஷயங்கள் படிக்கும்போதே பரபரப்பை கிளப்புகிறது. ஹாலிவுட் சென்னையை நோக்கி தலைதிருப்பிப் பார்த்தாலும் ஆச்ச‌ரியமில்லை.

எந்திரனின் டாக்கி போர்ஷன் அனைத்தும் முடிந்துவிட்டது. சில பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் சன் ஸ்டுடியோவில் முக்கியமான காட்சியொன்றை ர‌ஜினியை வைத்து எடுத்திருக்கிறார் ஷங்கர்.

முக்கியமான என்று சொல்ல காரணம் படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் ஸ்பாட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு இந்தக் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஷங்கர், ர‌ஜினி, ஒளிப்பதிவாளர் என்று மூன்று பேர் மட்டுமே இந்தக் காட்சி படமான போது உடனிருந்திருக்கிறார்கள்.

இத்தனை ரகசியமாக எடுக்கப்பட்ட காட்சி என்னவாக இருக்கும்?

படத்தின் முக்கியமான காட்சியொன்றில் ர‌ஜினி நிர்வாணத்தையொத்த கெட்டப்பில் தோன்றுவதாகவும், அந்த‌க் காட்சியைதான் சன் ஸ்டுடியோவில் எடுத்ததாகவும் தகவல் சொல்கிறார்கள்.

சிவா‌ஜி படத்தில் மொட்ட பாஸ் கெட்டப் பரபரப்பாகப் பேசப்பட்டது போல் இந்தக் காட்சியும் பேசப்படும் என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.

Comments

Most Recent