Heart surgery completed successfully... Goundamani is fine now!

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/goundamani.jpg
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் 4 மணி நேரம் இதய அறுவைச் சிகிச்சை நடந்தது.

இந்த ஆபரேஷன் முழு வெற்றி பெற்றதாகவும், இப்போது கவுண்டமணி நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சர்க்கரை வியாதி, கழுத்து வலி போன்ற உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த கவுண்டமணிக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. கவுண்டமணி நலமுடன் உள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றனர்.

Comments

Most Recent