சேலத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சிம்பு நேற்று முன்தினம் வந்தார். ஏஆர்ஆர்எஸ் தியேட்டரி...
சேலத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சிம்பு நேற்று முன்தினம் வந்தார். ஏஆர்ஆர்எஸ் தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த சிம்பு, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது: நல்ல காதல் கதையில் நடிக்க வேண்டும் என ஆசை. அதுவும் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டேன். இந்த படம் நான் எதிர்பார்த்த மாதிரி மறக்க முடியாத படம். வித்யாசமான காதல் கதையான இந்த படம் ஆரம்பிக்கும் போது பயம் இருந்தது. என்னை பொறுத்தவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் படம் பண்ணுவதில்லை.
கோவில், தொட்டி ஜெயா போல் கமர்சியல் படங்களுக்கு நடுவே, இதுபோல் சில விஷயமுள்ள படங்களை பண்ண வேண்டும். நல்ல படம் பண்ணினால் ஹீரோ மேல் உள்ள இமேஜை தவிர்த்து ரசிகர்கள் வரவேற்கின்றனர். இரண்டு ஹீரோவுடன் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். அதில எனக்கு பிரச்னை இல்லை. தனுஷ் மட்டுமல்ல, யாருடன் வேண்டுமானாலும் நடிக்க தயாராகவே இருக்கிறேன். அடுத்து வாலிபன் படத்தை இயக்கி நடிக்கிறேன். இதுவும் காதல் படம்தான். நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கு காதலிக்க ரொம்ப பிடிக்கும். இவ்வாறு சிம்பு கூறினார்.
Comments
Post a Comment