ஆமிர்கானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக ஹாலிவுட் சூப்பர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது நடிகர் பட்ட...
ஆமிர்கானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக ஹாலிவுட் சூப்பர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனது நடிகர் பட்டியலில் ஆமிர்கான் முதலிடத்தில் இருப்பதாகவும், தனது படைப்புகளில் ஆமிருக்கு முக்கியத்துவம் தர விரும்புவதாகவும் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அவதார் படைத்த அட்டகாச இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டெல்லி வந்திருந்தார். அங்கு நடந்த இந்தியா டுடே கான்க்ளேவ் 2010 நிகழ்ச்சியில் அவர் ஆமிருடன் பங்கேற்றார்.
பின்னர் அவர் கூறுகையில், ஆமிர்கானுடன் மேடையேற வாய்ப்பு கிடைத்ததைக் கெளரவமாக கருதுகிறேன். மிகச் சிறந்த நடிகர் அவர். நாளை (இன்று) அவருக்குப் பிறந்த நாள். தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கூட விட்டு விட்ட என்னுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார். இதை நான் பெரும் மரியாதையாக கருதுகிறேன் என்றார் கேமரூன்.
இதன் மூலம் காமரூனின் படத்தில் ஆமிர் நடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
Comments
Post a Comment