படம் இயக்கப்போறதா கிங்கிரண் நடிகரு திடீர்னு அறிவிச்சாரு. அறிவிப்போடு படம் நிக்குதாம்... நிக்குதாம்... படத்துக்கு பைனான்ஸ் பண்றதா சொன்ன ப...
படம் இயக்கப்போறதா கிங்கிரண் நடிகரு திடீர்னு அறிவிச்சாரு. அறிவிப்போடு படம் நிக்குதாம்... நிக்குதாம்... படத்துக்கு பைனான்ஸ் பண்றதா சொன்ன பார்ட்டி எஸ்கேப் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... அதனால வேற பைனான்சியரை நடிகரு தேடிட்டு இருக்காராம்... இருக்காராம்...
தமிழ்ல ஒரே படம் நடிச்சாரு வித¤யான ஷா நடிகை. தெலுங்குலயும் வாய்ப்புகள் வரலையாம்... வரலையாம்... அதனால மும்பைக்கு போனவரு திரும்ப மாடலிங்ல சேர்ந்துட்டாராம்... சேர்ந்துட்டாராம்... பெயரை மாத்திக்கிட்டு திரும்ப சினிமாவுக்கு புதுமுகமா வர முயற்சி பண்றதா நடிகைக்கு நெருங்கியவங்க சொல்றாங்க... சொல்றாங்க...
கலைக்குடும்ப வாரிசை வச்சு அவரோட மாமனாரே படம் தயாரிக்கிறாரு. முதல் படம் சுமாராப் போச்சு. இருந்தாலும் அடுத்த படத்தை கடன் வாங்கி முடிச்சிட்டாரு... முடிச்சிட்டாரு... ரெண்டு படத்துக்கும் ஏய்னு சத்தம் போட்டு படம் எடுத்தவருதான் டைரக்டரு. மூணாவதா மருமகனை வச்சு தயாரிக்கிற படத்துக்கும் அதே டைரக்டரை புக் பண்ணி இருந்தாரு. இப்போ டைரக்டருக்கும் தயாரிப்புக்கும் பிரச்னையாம்... பிரச்னையாம்... அதனால மூணாவது படத்துக்கு அந்த டைரக்டரு இல்லையாம்... இல்லையாம்...
Comments
Post a Comment