நாட்டாமை நடிகரு மலையாளம், கன்னடத்துல செகண்ட் ஹீரோவா நடிக்கிறாரு... நடிக்கிறாரு... தமிழ்ல அந்த மாதிரி நடிக்க சில கம்பெனிங்க கேட்டாங்களாம்....
நாட்டாமை நடிகரு மலையாளம், கன்னடத்துல செகண்ட் ஹீரோவா நடிக்கிறாரு... நடிக்கிறாரு... தமிழ்ல அந்த மாதிரி நடிக்க சில கம்பெனிங்க கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... தமிழ்ல எப்போவுமே நான் சோலோ ஹீரோதான்னு மறுத்துட்டாராம்... நடிகரு மறுத்துட்டாராம்...
சர்ச்சையில அடிக்கடி சிக்குற கான் நடிகரும் பிசின் நடிகையும் நட்பை புதுப்பிக்கிறாங்களாம்... புதுப்பிக்கிறாங்களாம்... இடையில ரெண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டுச்சு. சமீபத்துல கானை சந்திச்ச நடிகை, நட்பு கரம் நீட்டினாராம். அதுக்கு உடனே நடிகைக்கு பலனும் கிடைச்சிருக்காம்... கிடைச்சிருக்காம்... தன்னோட புதுப் படத்துல படுகோனே நடிகையை நீக்கிட்டாராம் கான். அவருக்கு பதிலா பிசினை புக் பண்ண தயாரிப்புக்கு உத்தரவு போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...
திவ்யமான நடிகை கன்னடத்துல படம் தயாரிக்கிறாரு. தமிழ்லயும் தயாரிக்க கதைகள் கேட்டாராம்... கேட்டாராம்... கதைகள் சொன்ன இயக்குனருங்க, எட்டு கோடி, பத்து கோடின்னு பட்ஜெட் சொன்னாங்களாம்... சொன்னாங்களாம்... கலங்கிப் போயிட்டாராம் நடிகை. இதைக் கேள்விப்பட்ட பிரகாச வில்லன் நடிகரு, 'நீங்க கவலைப்படாதீங்க. சீக்கிரமே நாம சேர்ந்து படம் தயாரிக்கலாம்'னு சொன்னாராம்... சொன்னாராம்... 'தமிழ்ல படம் தயாரிக்கிற ஐடியா இருந்துச்சு. இப்போ இல்ல'ன்னு நடிகை ஜகா வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...
Comments
Post a Comment