தங்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகளை வாரி வழங்கிவரும் முதல்வர் கருணாநிதிக்கு, கிடைக்கிற கேப்பிலெல்லாம் நன்றியைக் காட்டி கிறுகிறுக்க வைக்க...
தங்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகளை வாரி வழங்கிவரும் முதல்வர் கருணாநிதிக்கு, கிடைக்கிற கேப்பிலெல்லாம் நன்றியைக் காட்டி கிறுகிறுக்க வைக்கிறார்கள் சினிமாக்காரர்கள்!
கருணாநிதி கதை வசனம் எழுத, வேகமாக வளர்ந்து வரும் படம் பெண் சிங்கம். கருணாநிதியே அவ்வப்போது நேரில் பார்த்து, ஸ்பாட்டில் வசனம், பாடல்கள் எழுதி ஏகப்பட்ட பப்ளிசிட்டி கொடுத்துள்ள படம் இது.
இந்தப் படத்தில் இப்போது புதிதாக ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு ஆடுபவர்கள் லட்சுமிராய்- ராகவா லாரன்ஸ். இந்தப் பாடலுக்கான இசை மற்றும் நடனத்தை அமைத்திருப்பவரும் லாரன்ஸ்தான்.
கருணாநிதியைப் போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பாட்டுக்கு லட்சுமிராய் நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என லாரன்ஸ் சொல்ல, அந்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்று ஆடி அசத்தியுள்ளாராம் லட்சுமி ராய்.
'இந்தப் பாட்டு கலைஞர் அவர்களுக்கு சமர்ப்பணம் என்று சொல்லும்வண்ணம் மிகச் சிறப்பாக வந்துள்ளது' என்கிறார் ராகவா லாரன்ஸ்.
Comments
Post a Comment