கொலைமிரட்டல் எதிரொலி நடிகை ரஞ்சிதாவுக்கு சீடர்கள் பாதுகாப்பு நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீ...
கொலைமிரட்டல் எதிரொலி நடிகை ரஞ்சிதாவுக்கு சீடர்கள் பாதுகாப்பு
நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோபடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தனக்கு எதிராக நடந்துள்ள திட்டமிட்ட சதி என்றும் உண்மைகளை விரைவில் வெளியிடுவேன் என்றும் நித்யானந்தா கூறினார்.
இதற்கான ஆதாரங்களை சாமியாரின் மடத்தினர் சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நித்யானந்தருக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கும்பமேளாவில் பங்கேற்று வரும் சாமியார் ஒரிரு தினங்களில் பெங்களூர் மடத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் ரஞ்சிதாவை சாமியாருக்கு எதிராக திருப்ப முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. வீடியோ படம் சம்பந்தமாக அவர் மேல் குற்றம் சுமத்தி சாட்சியம் அளிக்க வைக்கவும் எதிர் கோஷ்டியினர் திட்டம் வகுக்கின்றனர். ரஞ்சிதா வுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் செய்தி வெளியானது.
இதையடுத்து ரஞ்சிதா திடீரென்று தலைமறை வானார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. தியாகராயநகரில் வீடு பூட்டி கிடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக கூறப்பட்டது.
அங்கு தற்கொலைக்கு முயன்றார் என்றும் ஆந்திர இணைய தளங்கள் மற்றும் தெலுங்கு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டன.
அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தேடினார்கள். யாரிட மும் சிக்கவில்லை. திடீரென்று அமெரிக்கா சென்றுவிட்டார். ரஞ்சிதாவின் சகோதரி வீடு உள்ளது. அங்கு சில நாட்கள் தங்கினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.
நித்யானந்தா ஆன்மீக மடத்துக்கு உலகம் முழு வதும் பக்தர்கள் உள்ளனர். சீடர்கள் மூலம் ரஞ்சிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காவி உடுத்திய சீடர்கள் சிலர் ரஞ்சிதா பாதுகாப்புக்காக உடன் செல்கிறார்கள். அமெரிக் காவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ரஞ்சிதா பயண மானார்.
அங்கும் சீடர்கள் பாது காப்புக்காக சென்றனர். அவரை சுற்றி காவி உடை சாமியார்களையே காண முடிந்தது. ரஞ்சிதா மட்டும் நாகரீக உடை அணிந்து இருந்தார்.
ஒரு வாரத்தில் சென்னை திரும்புவார் என்று கூறப் படுகிறது. முழுநேர ஆன்மீக பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்
Comments
Post a Comment