M. K. Azhagiri enters acting on Tamil movie

 Alagiri
மத்திய அமைச்சதர் மு.க.அழகிரி ஒரு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். நம்ப முடியாத செய்திதான் என்றாலும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருப்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது கிளவுட் நைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தூங்கா நகரம’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். மதுரை பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா மதுரையில் நடந்தது. படப்பிடிப்பை தொடங்கி வைத்தவர் அழகிரி.

இந்தப் படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மத்திய அமைச்சராகவே திரையில் தோன்றுகிறாராம் அழகிரி. முதலில் நடிக்க மறுத்தவர் மகனின் படம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.

தூங்கா நகரத்துக்குப் பிறகு அஜித் நடிக்க கௌதம் இயக்கும் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.

Comments

Most Recent