Madurai story will win - Vijayakanth


Even as his party workers are eagerly expecting the result of Pennagaram bypoll, actor and DMDK president Vijayakanth has predicted that his directorial debut ‘Virudhagiri’ will become a hit.
Speaking at the audio launch of ‘Goripalayam’, a film directed by Rasu Madhuravan and produced by Vijayakanth’s close associate Michael Rayappan, in Chennai Saturday night, the actor-politician said ‘Virudhagiri’ will soon be released. “The film will sure emerge triumphant,” he said.
On ‘Goripalayam’, he said, “I know Rasu Madhuravan right from the days he was working as an associate to Manivannan. He is a hard worker. All films centred in Madurai have become hits. ‘Goripalayam’ too will prove it.”
Tamil Film Proudcers Council president Rama Narayanan, Distributors Association chief Kalaipuli G Sekaran, producer P L Thenappan, directors Perarasu, Cheran and Raj Kapoor, actor-choreographer Raghava Larencce and financier Anbuchezhian among others took part.

குளோபல் இப்போடெய்ன்மென்ட் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம் ‘கோரிப்பாளையம்‘. ஹரிஷ், ராம கிருஷ்ணன், விக்ராந்த், ரகுவண்ணன், பூங்கொடி. சுவாசிகா, ஜாகர்தி அகர்வால் நடிக்கின்றனர். ராசு மதுரவன் இயக்குகிறார். சபேஷ்&முரளி இசை அமைக்கின்றனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜயகாந்த் வெளியிட, ராகவா லாரன்ஸ், எஸ்.அன்புச் செழியன் பெற்றனர். பிறகு விஜயகாந்த் பேசியதாவது:

மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்த போதிலிருந்தே ராசு மதுரவனை தெரியும். நல்ல உழைப்பாளி. ‘கோரிப்பாளையம்’ பாடல்களை பார்த்தேன். பிரமாதமாக படமாக்கி இருக்கிறார். நான் படம் இயக்குவது பற்றி டைரக்டர் ராம நாராயணன் குறிப்பிட்டார். அவரது படங்கள் 5 வார வெற்றிப் படங்களாக அமைந்திருக்கும். நான் 3 வார வெற்றி படத்தை நிச்சயம் தருவேன். ‘திருமூர்த்தி, ராஜ்ஜியம்’ போன்ற கதைகள் மதுரை பின்னணியில் நான் நடித்த படங்கள். இப்போது யாரைப்பார்த்தாலும் மதுரையை பற்றிய கதையைதான் எடுக்கிறார்கள். நான் பிறந்த ஊர் மதுரை. அங்குள்ள இடங்களை படங்களில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். மதுரையை மையமாக வைத்து எடுக்கிற படங்கள் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில் ‘கோரிப்பாளையம்’ வெற்றி பெறும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார். விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம நாராயணன், கலைப்புலி ஜி.சேகரன், பி.எல்.தேனப்பன், பேரரசு, ராஜ்கபூர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முடிவில் ராசு மதுரவன் நன்றி கூறினார்.

Comments

Most Recent