தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். அதில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு பிறகு வி...
தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். அதில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு பிறகு விக்ரம் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். அப்படத்தை இயக்கியபடியே தமிழ், தெலுங்கு இருமொழிகளில் புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
இதில் ரானா ஹீரோவாக நடிக்கிறார். இவர் பட அதிபர் ராம நாயுடுவின் பேரன். தெலுங்கில் இவர் நடித்த ‘லீடர்’ என்ற படம் சமீபத்தில் ரிலீசானது. இதையடுத்து செல்வராகவன் படத்தில் ரானா நடிக்க உள்ளார். சுரேஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நகரம், கிராம பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.
Comments
Post a Comment