No more movies after Oolalala - Jothi Krishna

http://www.voicetamil.com/wp-content/uploads/2009/11/jothikrishna_news-300x230.jpg
இனிமேல் படங்கள் இயக்குவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. பிரபலமான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவரின் மூத்த மகனான இவர் எனக்கு 20 உனக்கு 18, கேடி ஆகிய இரண்டு படங்களை பிரமாண்டமாக எடுத்தவர்.

தற்போது ஊலலலா என்ற ஜாலியான படத்தை இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் நிலையில் இருக்கிறது.

தொடர்ந்து நடிப்பது மட்டுமே செய்வேன். இயக்கம், தயாரிப்பது என்பதெல்லாம் மிகவும் சிரமமான காரியம். நடிப்பதால் அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை. நல்ல இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும், நல்ல இயக்குனர் என்று பெயரெடுப்பதைக் காட்டிலும் சிறந்த நடிகர் என பெயரெடுப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்கிறார்.

Comments

Most Recent