இனி நான் ஹீரோவாக நடித்தால், மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று சத்யராஜ் கூறினார். சுந்தர்.சி, சத்யராஜ் இணைந்து நடிக்கும் படம் ‘குரு சிஷ்யன்‘....
இனி நான் ஹீரோவாக நடித்தால், மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று சத்யராஜ் கூறினார். சுந்தர்.சி, சத்யராஜ் இணைந்து நடிக்கும் படம் ‘குரு சிஷ்யன்‘. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேசியதாவது: ‘நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்று எம்.ஜி.ஆர் பாடினார். அதற்கேற்ப நான் என்னை உணர்ந்திருக்கிறேன். இனி நான் ஹீரோவாக நடித்தால் அந்தப் படத்தை நானே பார்க்க மாட்டேன். பிறகு எப்படி மக்கள் பார்ப்பார்கள். என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.
இனி நான் தனி ஹீரோவாக நடிக்க மாட்டேன். அதற்காக சின்ன வேடங்களில் நடிப்பேன் என்று அர்த்தம் இல்லை. ஹீரோவுக்கு நிகரான அல்லது ஹீரோவுக்கான முக்கியத்துவத்தில் 40 சதவிகதம் இருக்கும் படத்தில் நடிப்பேன். அந்த வகையில் நான் இப்போது சுந்தர்.சியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ, ஹீரோயின், பஞ்ச் டயலாக் எதுவுமே தேவையில்லை. நல்ல கதை இருந்தால் போதும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இயக்குனர்கள் பத்ரி, பேரரசு, செல்வபாரதி, பொன்வண்ணன், பரத், குஷ்பு, சரண்யா, தயாரிப்பாளர் எச்.முரளி, இசை அமைப்பாளர் தினா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sathyaraj while speaking during the audio launch of Guru Shishyan said,” MGR has sung the song Nee Unnai Arindhal Ulagathil Poradalam which means if you know yourself you can struggle in this world.
Accordingly I have understood myself. In future I myself will not see the film in which I have done the lead role. Then how can you expect audience to see my film. The time has come for me to change. I will not act as hero. That doesn’t mean that I will act in small roles.
I will do the roles which will have equal importance as the heroes. There should be at least 40% importance for me equivalent to the hero. In this way I have acted with Sundar C in this film.

Comments
Post a Comment