Preity Zinta doesn't rule out joining politics

 http://thatstamil.oneindia.in/img/2010/03/12-preity-zinta200.jpg

டெல்லி: சினிமா மற்றும் கிரிக்கெட்டில் ஒரு 'ரவுண்ட்' வந்துவிட்டு தற்போது ஐ.நா எய்ட்ஸ் திட்டத்துக்கு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தா, அடுத்ததாக அரசியலில் கலக்க திட்டமிட்டுள்ளார்.

எனினும், 'அரசியல் திட்டம் இப்போதைக்கு இல்லை. அதற்கு இன்னும் ரொம்ப காலம் இருக்கு' என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பார்ட்னருமான ப்ரீத்தி ஜிந்தா டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.

பல்வேறு கேள்விகளுக்கு ப்ரீத்தி ஜிந்தா பதில் அளிக்கையில், 'அரசியலில் ஈடுபட மாட்டேன் என சொல்ல மாட்டேன். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட பயணம் போக வேண்டியுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாரபட்ச நிலை மாறும் என நம்புவோம்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா என சக்திவாய்ந்த பதவிகளில் பெண்கள் இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

எனவே, இட ஒதுக்கீடு சட்டம் மூலம் இந்திய பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.

Comments

Most Recent