மணிரத்னம் அதிக பொருட்செலவில் உருவாக்கி வரும் ராவணன் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ரூ ...

மணிரத்னம் அதிக பொருட்செலவில் உருவாக்கி வரும் ராவணன் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ரூ 100 கோடி செலவில் மணி ரத்னம் உருவாக்கி வரும் படம் ராவணன். ராமாயண காப்பியத்தின் அடிப்படையில், நவீன இந்தியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தப் படம் இப்போது சர்வதேச அளவில் பெருமைக்குரிய விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
விரைவில் 63 வது திரைப்பட விழா கேன்ஸில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தை மணிரத்னம் அனுப்பியுள்ளார். ராவணன் படத்தின் ஒரிஜினல் இந்தி பிரதியை இந்த விழாவில் அவர் திரையிடுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராய் பங்கேற்று, விழாவைத் துவக்கி வைப்பது நினைவிருக்கலாம். இந்த ஆண்டு அவர் நடித்த ராவண் படம் திரையிடப்படுவதால், அவருக்கான முக்கியத்துவம் கூடுகிறது.
Earlier it was said Mani Ratnam will premiere his ‘Raavan’ at the IIAFA Awards in Seoul later this year. But now the news is that the ace director is going to France with his lead artistes to premiere ‘Raavan’ at the prestigious Cannes Film Festival.
Sourced also said Mani will premiere the Hindi original version of ‘Raavan’ on May 14 at the festival. Abhishek, Aishwarya, and Vikram who are the lead players in the Hindi versions are also expected to travel to Cannes to participate at the festival.
Few days ago Mani Ratnam had officially announced that the music of his buzzing film will be launched in April and the movie will release in June.
Comments
Post a Comment