நடிகை ரம்பாவுக்கு ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவி...
நடிகை ரம்பாவுக்கு ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த மேஜிக்உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 37 வயதாகும் இந்திரன் – ரம்பா திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் 8ம்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ரம்பா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ரம்பாவை திருமணம் செய்யப்போகும் இந்திரன் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் புரியும் தொழிலதிபர் ஆவார். இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட ரம்பாவை, இந்திரனுக்கு பிடித்து விட்டதால் ரம்பா குடும்பத்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவீட்டாரும் சேர்ந்து திருமண பேச்சு நடத்தி இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். திருமணத்துக்கு முன்னே ரம்பாவுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை இந்திரன் பரிசளித்தது நினைவிருக்கலாம்
update
கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம் ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘குயிக் கன் முருகன்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. ‘த்ரீ ரோஸஸ்’ படத்தை தயாரித்து நடித்த அவர், தற்போது ‘விடியும் வரை காத்திரு’ படத்தை தன் அண்ணி பல்லவி பெயரில் தயாரித்து நடிக்கிறார். மேலும், ‘பெண் சிங்கம்’ படத்திலும் முக்கிய வேடமேற்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார். இதனால் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
இந்நிலையில் ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 37 வயதாகும் இந்திரன் - ரம்பா திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் 8ம்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ரம்பா குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Rambha got engaged to Canada-based business man Indran a couple of months ago. The news now is that the wedding is scheduled to take place in Tirupathi on April 8th. The wedding is expected to be a private affair with just a few family and friends attending.
Following the wedding, a reception will be hosted in Chennai on April 11th. The venue for the reception is said to be a popular five-star hotel.
Comments
Post a Comment