Ranjitha changing hideout place daily

http://thatstamil.oneindia.in/img/2010/03/10-ranji200.jpg

தனக்கு மிரட்டல் வருவதாலும், பிரச்சனையிலிருந்து தப்பவும் தினசரி ஒரு இடத்தில் தங்கி வருகிறாராம் ரஞ்சிதா.

நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ வெளியான பின்னர் இருவருமே தலைமறைவாகி விட்டனர். இந்த விவகாரத்தில் இரு தரப்புமே தத்தமது நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டு விட்டனர்.

இந் நிலையில் தற்போது ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்ற கேள்வி வலுத்து வருகிறது. அவர் ஆந்திராவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதாவின் பூர்வீகமே ஆந்திராதான். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அவரால் அங்குள்ள சொந்த வீட்டில் குடும்பத்தினருடன் தங்க முடியவில்லையாம். இதனால் உறவினர்கள், தோழியர் வீடுகளில் தங்கி வருகிறாராம் ரஞ்சிதா.

அதாவது தினசரி ஒருவரது வீட்டில் தங்குகிறாராம். தனது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்ற அச்சத்தில் இவ்வாறு தினசரி ஜாகை மாறி வருகிறாராம்.

Comments

Most Recent