Sarathkumar - Sneha paring first time for Vidiyal

http://thatstamil.oneindia.in/img/2010/03/10-sneha-200.jpg

கோடம்பாக்கத்தில் சின்ன ஹீரோவிலிருந்து கலைஞானி கமல் வரை ஜோடி கட்டி ஆட்டம்போட்டுவிட்டார் ஸ்னேகா.

ஆனால் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருடன் மட்டும் இணைந்து நடிக்காமல் இருந்தார். அதற்கான சந்தர்ப்பம் சிலமுறை வாய்த்தும் கூட பின்னர் ஏனோ டிராப்பாகிவிட்டதாம்.

இப்போது மீண்டும் அப்படியொரு வாய்ப்பு வர, பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுள்ளது இந்த புதிய ஜோடி.

ஆக, முதல் முறையாக சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்னேகா. இந்தப் படத்தை இயக்குபவர் நடிகர் சங்கத்தில் இணைச் செயலாளராக பொறுப்பில் உள்ள செல்வராஜ்.

விடியல் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இன்னொரு ஹீரோயினும் உண்டு. இந்திரவிழாவில் நமீதாவுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டிய ஸ்ருதிதான் அவர்.

தயாரிப்பாளர் அநேகமாக ராதாரவியாக இருக்கலாம் என்கிறார்கள்.

Comments

Most Recent