நடிகர், தய ா ரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்... இதனுடன் விளம்பரப் பட நடிகர் என்ற புதுப் பெயரும் சசிகுமாரை...
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்... இதனுடன் விளம்பரப் பட நடிகர் என்ற புதுப் பெயரும் சசிகுமாரை வந்து சேர்கிறது. ஆமாம், விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.
நட்சத்திரங்கள் சிபாரிசு செய்தால்தான் எதையும் காதிலே போட்டுக் கொள்கிறார்கள் ஜனங்கள். இதனால் பிரபலங்களுக்கு கொள்ளை லாபம். சில விநாடி விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்கில் பில் போடுகிறார்கள். அமீர்கானை 35 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறதாம் ஒரு நிறுவனம்.
பிரபல பெயின்ட் நிறுவனம் ஒன்று தனது விளம்பரத்தில் நடிக்க சசிகுமாரை அணுகியுள்ளது. அவரும் ஓகே சொல்லியிருக்கிறார். விரைவில் விளம்பரப் படத்தை ஷூட் செய்ய சென்னைக்கு ஒரு டீமை அனுப்பி வைக்க இருக்கிறதாம் அந்த மும்பை நிறுவனம்.
தாடிக்காரருக்கு திரும்பிய திசையெல்லாம் அதிர்ஷ்டக்காற்று. ஜமாய்ங்க பாஸ்.

Comments
Post a Comment