Sindhu Menon in a English movie

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw562.jpg

ஆங்கில படத்தில் நடித்து வருகிறார் சிந்து மேனன். இது குறித்து அவர் கூறியதாவது: ‘சுபத்ரா’ தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். ‘ஈரம்’ போன்று இதுவும் திகில் படம்தான். இது தவிர ஆங்கில படம் ஒன்றில் நடித்து வருகிறேன். இதில் ஆங்கில நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள். நான் இந்திய பெண்ணாக நடிக்கிறேன். காஷ்மீர் மற்றும் கேரளாவில் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.

ஜப்பான், பாரீஸ், அமெரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்துக்கு பிறகு கன்னட படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ் படத்தில் நடிக்கவும் பேச்சு நடக்கிறது.

Comments

Most Recent