Tamanna is the key to enter 'Sun TV fort'!

 http://thatstamil.oneindia.in/img/2010/03/30-vijay-tamanna1-200.jpg
-இதை நாம் சொல்லவில்லை. சுறா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நடிகர் விஜய் மற்றும் சன் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் கூறியது.

எதற்காக இதைச் சொன்னார்கள்?

சுறா ஆடியோ வெளியீட்டு விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது. விழாவில் வாழ்த்திப் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "அது என்னமோ தெரியல... தமன்னா நடிக்கிற படங்களை மட்டும் முதல்ல வாங்கிக்கிறாங்க சன் டிவியில. சன் டிவி படம் வாங்கணும்னா முதல்ல தமன்னாவை ஒப்பந்தம் பண்ணனும் போலருக்கு" என்றார் போகிற போக்கில்.

அடுத்துப் பேசிய விஜய், "எனக்குக் கூட ஒரு டவுட்... தமன்னா சன்டிவிக்கு சொந்தக் காரங்களோன்னு... அவங்க படம் எல்லாம் சன்டிவி வாங்கியிருக்கு. இனி முதல்லயே தமன்னாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திடலாம்..." என்றார்.

பின்னர் இறுதியாகப் பேசிய சன் டிவியின் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவும், "தமன்னா இன்று முன்னணி நடிகைகளுள் ஒருவர். தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறார். தமன்னாவுக்கு முதலில் அட்வான்ஸ் கொடுங்கள்... சன் டிவி படத்தை வாங்கிக் கொள்ளும்" என்றார்.

Comments

Most Recent