கன்னியாகுமரி பகுதியில் நடந்த உண்மை சம்பவம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி டைரக்டர் வி.சி.வடிவுடையான் கூறிய...
கன்னியாகுமரி பகுதியில் நடந்த உண்மை சம்பவம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி டைரக்டர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது: அதிகம் படித்தவர்கள் உள்ள பகுதியில் கன்னியாகுமரிதான் முதலிடம் வகிக்கிறது. அதிகம் வன்முறை சம்பவங்கள் நடக்கும் பகுதியிலும் அதற்குதான் முதலிடம். 12 வருடத்துக்கு முன்பு அப்பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகிறது. ஹீரோவாக கரண் நடிக்கிறார்.
இதன் கிளைமாக்ஸுக்காக பல வாரம் அவர் வெயிலில் நின்று உடலை வருத்தி நடித்தார். ஹீரோயின் அஞ்சலி. இதுவரை 90 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு செய்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். ஜே.எஸ். 24 பிரேம் சார்பில் ஜெ.செந்தில்குமார் தயாரிக்கிறார். குமரி வட்டார வழக்கு வசனங்கள் இடம்பெறுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமும், வேகமும் இருக்கும். படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒவ்வொருவரது மனதிலும் 4 மணி நேரமாவது காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கும். மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடிவுடையான்
Comments
Post a Comment