Thilagan suspended from Malayalam actors sangam

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw491.jpg

ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து திலகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் திலகன் விவகாரம் கேரள சினிமா உலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திலகனுக்கு ஆதரவாக பிரபல மலையாள எழுத்தாளரும், பேச்சாளருமான சுகுமார் அழிக்கோடு களத்தில் குதித்தபோது, இந்த சர்ச்சையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. அவர் மோகன் லாலையும், மம்மூட்டியை யும் சரமாரியாக தாக்கி பேசினார். இதற்கு பதிலடியாக மோகன் லாலும் தாக்கி பேசினார். ‘சுகுமாருக்கு சித்தபிரமை பிடித்து விட்டது. அதனால் தான் உளறுகிறார்’ என்று தெரிவித்தார். மேலும் தனது சகோதரன் சொத்தை அபகரித்து இருப்பதாக சுகுமார் குற்றம்சாட்டி இருப்பதால் அவர் மீது மோகன் லால் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதற்கிடையே, ‘கேரளா முழுவதும் அறியப்படும் எனக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாக மோகன் லால் கூறியிருக்கிறார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர ஆலோசனை நடத்தி வருகிறேன். அப்படி நான் வழக்கு தொடர்ந்தால் இனிமேல் அவர் வாய்பேச முடியாதபடி செய்து விடுவேன்’ என்று சுகுமார் தெரிவித்தார். இதற்கிடையே திலகன் மலையாள நடிகர் சங்கம் முன் நேற்று ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட், செயலாளர் இடைவேளை பாபு ஆகியோர் கூறுகையில்,  ‘சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் திலகன், வேண்டும் என்றே ஆஜராகவில்லை. மார்ச் 8&ம் தேதிக்குள் அவர் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். அதுவரை அவரை சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Comments

Most Recent