Vijay in Seemon direction

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7ur6HLDCyJizlNnJmp2nb6syoPyqUdpoq7-HOhJ1tMGrnNDIA8wJqvwwSROcNbfDPESNgIwojBgHAZYKVqGgmOw5WYtu7afBtNSyJBdc8Ijakbkto5di4zBuKZFgp0LFgXHfSPUvo4pQ/s400/vijay1.jpg

மே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக ப‌ரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், ‌ரிலாக்சாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். படத்தின் ஹீரோ விஜய்.

தாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.

ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார்.

தமி‌ழீழ தேசிய‌த் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent