தனி தெலுங்கானாவுக்கு ஆதாரவு தராத சிரஞ்சீவி, தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆவேசமாகப் பேசின...
தனி தெலுங்கானாவுக்கு ஆதாரவு தராத சிரஞ்சீவி, தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் விஜயசாந்தி.
ஆந்திர சட்டசபையில் போலீஸ் துறை வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் ஆனது. இம் மசோதாவிற்கு சிரஞ்சீவி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்பியும் நடிகையுமான விஜயசாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கானா தனி மாநிலத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்களிடம் சென்று தனி மாநிலத்தை அமைக்க விட மாட்டோம் என்று கூறி வருகிறார். தனி மாநிலத்திற்கு எதிரான போராட்டத்தையும் தூண்டி விடுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
தெலுங்கானாவை எதிர்க்கும் சிரஞ்சீவி ஹைதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர் மீது தெலுங்கானா மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்... என்றார்.
Comments
Post a Comment