Vinnaithandi Varuvaaya Hit Song! Chinmayi on a high

 http://thatstamil.oneindia.in/img/2010/03/10-chinmayi200.jpg

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் தான் பாடிய அன்பில் அவன் பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், பாடகி சின்மயி பெரும் குஷியில் உள்ளார்.
ஏற்கனவே சிவாஜி படத்தில் இடம் பெற்ற சஹானா சாரல் பாடல் சின்மயிக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. இப்போது மீ்ண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறாராம் சின்மயி.

இதை விட முக்கியமாக இப்படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசியவரும் சின்மயிதான். இதுவும் பாராட்டுக்களை வாரிக் குவிக்கவே ரொம்பவே குஷியாகி விட்டார் சின்மயி. அதை விட திரிஷாவே தொடர்பு கொண்டு சின்மயிக்கு தேங்ஸ் சொல்லி வாயாரப் புகழ்ந்து விட்டாராம்.

சின்மயி பிரபல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுவது இது முதல் முறையல்ல. பல நடிகைகளுக்கு அவர் டப்பிங் பேசியு்ளார். இருப்பினும் இப்போதுதான் சம்பந்தப்பட்ட நடிகையிடமிருந்து நேரடியாகவே பாராட்டு கிடைத்துள்ளதாம்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளில் நாயகிகளுக்கு டப்பிங் கொடுத்தது சின்மயிதான். இரு மொழிகளிலும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்ததை எதிர்பார்க்கவில்லையாம்.

தமிழில் திரிஷா செய்த வேடத்தில் தெலுங்கில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Most Recent