VTV - Double Climax - Double Sucess!

http://thatstamil.oneindia.in/img/2010/03/01-vin200.jpg

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கிலும் கடந்த வெள்ளிக் கிழமையன்றே ரிலீஸானது 'ஏ மாயா சேஸவே' என்ற தலைப்பில்.

இந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர் தமிழில் இந்த ஜோடி கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தது கிளைமாக்ஸில். இதேபோல தெலுங்கு கிளைமாக்ஸில் சிம்பு - த்ரிஷா சிறப்பு காட்சியில் தோன்றுவார்கள்.

தமிழுக்கு எதிர்மறையான முடிவையும், தெலுங்குக்கு பாஸிடிவ் கிளைமாக்ஸையும் வைத்திருந்தார் கவுதம் மேனன்.

முதலில் இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் ஆட்சேபணை சொல்லப்பட்டதாம். ஆனாலும் தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று கவுதம் மேனன் சொல்லிவிட்டதால் அப்படியே வெளியிட்டனர்.

'தெலுங்கில் படம் பெரிய வெற்றி என்று ரிசல்ட் வந்துள்ளதாம். சிம்பு நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது' என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்.

இந்த வெற்றி, அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான க்ளைமாக்ஸ் முயற்சிக்கு தூண்டுதலாக உள்ளது என்கிறார் கவுதம் மேனன்.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்குப் பதிப்பு சென்னையிலும் வெளியாகியுள்ளது.

Comments

Most Recent