'Who is Dillu Thurai?' AIDS awareness

 http://cinema.dinakaran.com/cinema/gallery/ct16.jpg

‘நிறைய படங்களில் குணசித்திரம், வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறேன். அதில் கிடைக்காத விளம்பரம் ‘தில்லுதுர' எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தில் நடித்தபோது கிடைச்சது. ‘இது சினிமாவா, டி.வி.சீரியலா?' என்று கேட்டு எனக்கு நிறைய போன் வந்தது. எய்ட்ஸ் பற்றி ஆலோசனை பெறுவதற்காக 20 நொடிகளில் 4 பிரிவுகளாக டைரக்டர் ஜே.டி.ஜெர்ரி இயக்கிய படமிது' என்றார் ராம்ஜி. ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு கழகம் சார்பில் உருவான இந்த சில நொடி படம் மற்றும் விளம்பரத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.1.20 கோடி' என்கிறார் திட்ட இயக்குனர் ஷம்பு கலோலி.


தில்லுதுர - இது இப்பொழுது எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம். இது என்ன படமா? அல்லது இது தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியா? என்ற கேள்விக்கு பதில்
இது ஒரு சமூக விழிப்புணர்வு செய்தி விளம்பரம்.

நம்பிக்கை மையம் சார்பில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

நம்முடைய ஒவ்வொரு விதமான சந்தேகங்களை தீர்க்க ஒவ்வொரு இடம் இருப்பது போல், எச்.ஐ.வி ஃ எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களை தீர்க்க இருக்கும் இடமே நம்பிக்கை மையம். இந்த விளம்பரம் மூன்று பாகங்களாக உள்ளது,

இதில் முதல் பாகத்தில், தில்லுதுர என்ற கதாபாத்திரத்தை பற்றியும், இரண்டாம் பாகத்தில் அவனுக்கு ஏற்படும் குழுப்பத்தையும் சந்தேகத்தையும், மூன்றாவது இறுதி பாகத்தில் அதற்கான விடையாக நம்பிக்கை மையத்தையும் காட்டியுள்ளனர்.

இதில் பிரதானமாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. ஒன்று... ஆலோசனை பெற நினைப்பது தப்பில்லை ஆனால் தப்பில்லாமல் ஆலோசனை பெற நம்பிக்கை மையம் செல்லலாமே என்றும் இரண்டாவதாக நம்பிக்கையுடன் நம்பிக்கை மையம் சென்றால் சரியான தெளிவு பிறக்கும் என்பதையும் சொல்லியுள்ளனர்.

தில்லுதுர என்ற கதாபாத்திரம் மற்றும் கான்செப்ட்டை என் அன்ட் டி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உருவாக்க, ஜே ஜெர்ரி இயக்கி அந்த காதாபாத்திரத்தை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக மாற்றியுள்ளனர்.

இந்த காதாபாத்திரத்தில் நடிகரும், நடன இயக்குனருமான ராம்ஜி சமூக நோக்கோடு நேர்த்தியாக நடித்துள்ளார்.

முன்பு புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்ற பரபரப்பான விளம்பரம் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தில்லு துர என்ற பெயரில் வெளியான இந்த விளம்பரம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Most Recent