Will SIAA sack Ranjitha from membership for sex scandal?

 http://thatstamil.oneindia.in/img/2010/03/05-nithya-6-200.jpg

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து மதத்தின் தீவிர நம்பிக்கையாளர்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது நித்தியானந்தா- ரஞ்சிதாவின் லீலைகள் அடங்கிய வீடியோ.

இந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை விட தற்போது ரஞ்சிதாதான் அதிகம் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளார். காரணம், ரஞ்சிதாதான் நித்தியானந்தா மீது விழுந்து புரளுகிறார். அவரை டிவி கூட பார்க்க விடாமல் வேறு செயலுக்கு அழைப்பது போல காட்சிகள் உள்ளன.

ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். நாடோடித் தென்றலில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.

தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்னர் மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கினார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு தொடரில் நடித்து வந்தார். தற்போது மணிரத்தினத்தின் ராவணன் படத்திலும் நடித்து வந்தார்.

இந் நிலையில்தான் நித்தியானந்தாவுடன் சல்லாபம் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.

முன்பு புவனேஸ்வரி விபச்சாரம் செய்து போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது அது குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கை உலகம் மீது திரையுலகம் கடுமையாகப் பாய்ந்தது.

இன்னின்னார் விபச்சாரம் செய்கிறார்கள் என்று ரேட் வாரியாக ஒரு செய்தியை வெளியி்ட்ட நாளிதழ் மீது சட்டம் பாய்ந்து கைது வரை போய் நின்றது.

கூடவே, கூட்டத்தைக் கூட்டி கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தங்களது கோபத்தையும் தீர்த்துக் கொண்டது நடிகர் சங்கம்.

ஆனால் இன்று ஒரு நடிகை விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து சிக்கியுள்ளார். இவர் மீது நடிகர் சங்கம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்சிதாவை நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பார்களா என்றும் தெரியவில்லை.

Comments

Most Recent