இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் ராவணா படத்துக்கு நான்கு க்ளைமாக்ஸ்களை வைத்துள்ளாராம் மணிரத்னம். ஐஸ்வர்யா ராய், ...
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் ராவணா படத்துக்கு நான்கு க்ளைமாக்ஸ்களை வைத்துள்ளாராம் மணிரத்னம்.
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் விக்ரம் நடித்துள்ள ராவணன் படத்தின் கதை ராமாயணத்தைத் தழுவியது என்பது நினைவிருக்கலாம். ராமாயணம் ஒரே கதைதான் என்றாலும் அதை எழுதிய ஆசிரியர்கள் சொன்ன விதத்தில் அது மாறுபட்டு நிற்கிறது. வால்மீகி ராமாயணம் வேறாகவும், துளசிதாஸரின் ராமாயணம் வேறாகவும் உள்ளது. வேறு சில ராமாயணங்களும் வழக்கில் உள்ளன.
ராமாயணக் கதையில் இலங்கையில் ராவணனின் காவலில் இருந்த சீதையை ராமன் மீட்டுக் கொண்டு போவதாக கூறப்பட்டிருக்கும். இன்னும் ஒரு பிரிவினர், ராமரிடம் சீதை தாமாகவே வந்து சேர்ந்தார் என்றும் கூறுவார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்ட மணிரத்னம் தனது நவீன ராமாயணத்துக்கு 4 வித்தியாசமான க்ளைமாக்ஸ்களை எடுத்துள்ளாராம். இதில் சீதையாக வரும் கேரக்டர் மீண்டும் வில்லனிடமே திரும்பிப் போவதாகவும் ஒரு முடிவு இருப்பதாகக் கூறப்படுகிகது.
இந்து அமைப்புகளின் கோபத்தைச் சம்பாதிக்காமல் படத்தை ஓட்டிவிடலாம் என்று மணிரத்னம் விரும்பினாலும், சர்ச்சைக்குரிய க்ளைமாக்ஸ் இருந்தால் மட்டுமே பெரும் ஓபனிங் கிடைக்கும் என்று அவரிடம் சொல்லப்பட்டுள்ளதாம். எனவே கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் நான்கு க்ளைமாக்ஸ்களை எடுத்துள்ளாராம் மணிரத்னம்.
ஏற்கெனவே இந்தப் படத்துக்கு பஜ்ரங்தள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போது இந்த க்ளைமாக்ஸ் செய்தியைக் கசிய விட்டுள்ள ராவணன் தரப்பு. இதைத் தொடர்ந்து உருவாகும் சர்ச்சையை பப்ளிசிட்டியாக்க நினைக்கிறார்களோ!
Comments
Post a Comment