சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

http://img1.dinamalar.com/cini//CNewsImages/Thumb/2040sanikilamai_T.jpg

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி... என்ற தலைப்பை பார்த்ததும், 5 மணிக்கு என்ன? என்று யோசிக்காதீர்கள். யதார்த்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தை தயாரித்த எஸ்.பி.எஸ். மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்புதான் இது. அரசுப்பணியில் சேர முயற்சிக்கும் இளைஞராக படத்தின் நாயகனாக ராகுல் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

மதுரை டூ தேனி படத்தில் ஒரு நாள் பேருந்து பயணத்தில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொன்னது போல இந்த படத்தில் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல் கலந்து விறுவிறுப்பாக சொல்லி படத்தின் கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகமாகிறார் ரவிபாரதி. திரைக்கதையை டைரக்டர் ரதிபாலா வடிவமைத்திருக்கிறார். இவர் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் சூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை மாவட்ட பகுதிகளிலும் நடைபெற உள்ளது. எஸ்.பி.எஸ்.குகன் ஒளிப்பதிவு செய்ய, ஜேவி இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் இரா.தமிழ்செல்வன் எழுதுகிறார். எஸ்.பி.எஸ். மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.ஜானகி சோனைமுத்து, தங்கம் சிவதாஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Comments

Most Recent