92 லட்சம் போச்சே! - Santhanam annoyed

 http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/Santhanam.jpg
தமிழ் சினிமா காமெடியில் தனக்கென தனி பாதையை உருவாக்கி வெற்றி பெற்றிருப்பவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய இவர்தான் இப்போது கோலிவுட்டின் பிஸி காமெடியன். ரசிகர்களை கலகலப்பூட்டும் சந்தானம் இப்போது கவலையில் இருக்கிறாராம். காரணம் வடிவேலுவை அழ வைத்த அதே நில மேட்டர்தான். மக்களை சிரிக்க வெச்சு சம்பாதித்த பணத்தில் வளசரவாக்கம் பகுதியில் நிலம் வாங்க முடிவு செய்த சந்தானம், அதற்காக ஒரு இடத்திற்கு ஒன்றை கோடி ரூபாய் ரேட் பேசி முடித்திருக்கிறார். முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுத்த சந்தானம், நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த பணத்திற்கு கையெழுத்து கூட வாங்கவில்லையாம். மீதத் தொகையுடன் ரிஜிஸ்தர் பண்ண போகும்போது நிலைமையை தலைகீழாகியிருக்கிறது. மூணுகோடிக்கு வேறு ஒரு பார்ட்டி நிலத்தை கேட்டதால், நில உரிமையாளர் சந்தானத்துக்கு நிலம் கிடையாது என்று கூறி விட்டாராம். சரி... அப்போ நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையையாவது திருப்பிக் கொடுங்கள் என சந்தானம் கேட்க, நிலம் விற்கும்போது பணத்தை கொடுக்கிறேன், என்று கூறி இழுத்தடிக்கிறாராம்.

இப்போது வளசரவாக்கம் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர் உதவியுடன் பஞ்சாயத்து பேசி, கொடுத்த பணத்தை திருப்பி வாங்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சந்தானம், அதற்காகவே பெரும் தொகையை செலவு செய்து கொண்டிருக்கிறாராம்.

Comments

Most Recent