Aameer Suriya's Dup

Aameer Suriya's Dup
'கஜினி' படத்துக்கு விளம்பர டிசைன் நல்லா வரணும்னு பட கதைய டிசைனர்கிட்ட சொன்னேன். ‘ஹீரோவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ். அந்த ரோலுக்கு ஏதாவது ஒரு பழக்கம் மட்டும் மறக்காம இருக்கிற மாதிரி வைக்கணும். என்ன வைக்கலாம்னு பிடிபடலேÕனு சொன்னேன். ‘இடக் கை பழக்கத்தை வைக்கலாம்Õனு டிசைனர் சொன்னார். அவருக்கும் அந்த பழக்கம் இருந்திருக்கு. சரினு பட்டதால அதையே வச்சேன். இடக்கை பழக்கம் உள்ளவரா சூர்யா நடிச்சாலும் குளோசப் ஷாட்ல கையெழுத்து போடுறதுக்கு வரல. அப்போ அந்த யோசனைய சொன்ன டிசைனரையே வரச்சொல்லி நடிக்க வச்சேன். இந்தி ‘கஜினி' படத்துலயும் அந்த காட்சிக்கு அதே டிசைனர்தான் நடிச்சார். அவர் வேறு யாருமில்லை ‘பலே பாண்டியா' படத்தை இயக்குகிற சித்தார்த் சந்திரசேகர்தான்'. 'பலே பாண்டியா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இப்படி பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Comments

Most Recent