Abhishek is not handsome - Aishwarya Bachan


ஐஸ்வர்யா ராய் ரசிகர்களுக்கு 2009-ம் ஆண்டு ஏமாற்றமானதாகவே அமைந்தது. காரணம் கடந்த வருடம் இவர் நடித்து ஒரு படமும் வெளியாகவில்லை.

ஆனால் அந்த நிலை இந்த ஆண்டு மாறுகிறது. ஷஐஸ்’ நடித்த ஷராவணன்’, ஷஎந்திரன்’, ஷஆக்ஷன் ரீப்ளே’, ஷகுஸாரிஷ்’ என 4 படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

ஐஸிடம் சினிமா பற்றிக் கேட்டால், ஷஷநான் எனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன்” என்று சிம்பிளாக மட்டுமே பதில் வருகிறது. ஆனால் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால் ஐஸின் முகத்தில் பல்பு எரிகிறது.

“பச்சன் குடும்பத்தை திறமைசாலிகளின் கூடாரம் ஆக்கியது எது?”
ஷஷநாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நாங்கள் எல்லோருமே கடுமையாக உழைப்பது, ஒப்புக்கொண்டவற்றில் எங்களின் சிறந்த திறனை வெளிக்காட்டுவது என்றுதான் ஆரம்பித்தோம். மக்கள் எங்கள் மீது கொட்டும் அளவுக்கதிகமான அன்பு, பாசம் காரணமாக நாங்கள் அடக்கமாக உணர்கிறோம்” என்றபடி தனது மின்னல் புன்னகையை வெளியிடுகிறார், ஐஸ்.
ஐஸ்வர்யா வென்ற அழகுராணி கிரீடங்கள் குறித்து பேச்சுத் திரும்புகிறது. படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தான் அழகு ராணி ஆகவில்லை என்கிறார் ஐஸ்.

ஷஷஅப்போதைய காலகட்டத்தில், சினிமாவில் நுழைவதற்கான படிக்கட்டுகளாக அழகுப் போட்டிகள் இல்லை. நான் பல படவாய்ப்புகளை மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தியாவின் சார்பில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டேன்” என்று கூறுகிறார் ஐஸ்.

ஷஷநான் எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறேன். நான் மாடல், நடிகை, அழகுராணிப் பட்டம் வெல்பவளாக மட்டும் இல்லை. பன்முகத்தன்மை வாய்ந்தவளாக என்னை மாற்றிக் கொண்டேன். அதனால்தான் இந்தியாவின் சார்பில் உலக அளவிலான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்று பெருமிதம் காட்டுகிறார், திருமதி அபிஷேக்.

தனது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சனின் ஷஸ்டைல்’ குறித்தும் விமர்சிக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஷஷஅபிஷேக் எப்போதும் விரும்பத்தகுந்த அழகனாக இருந்தது இல்லை. அவரது ஷஸ்டைல்’ வேறுபட்டது, மற்றவர்களிடம் காண முடியாதது. திரையில் இயல்பான தோற்றத்தைக் கொண்டு வந்தவர் அபிஷேக் தான். எல்லா ஷகேசுவல் ஆடைகளிலும்’ அவர் நன்றாகத் தோன்றுவார்”

“மாமனார்?”

ஷஷஅப்பா’ (அமிதாப்) ஒரு ஷஸ்டைல் அடையாளம்’. உண்மையான ஷபேஷன்’ பிரியர். அவர் எதை அணிந்தாலும் மக்கள் ஷவாவ்’ என்பார்கள்!” -ஷபளிச்’சென்று முடிக்கிறார், ஐஸ்வர்யாராய் பச்சன்.

Comments

Most Recent