Entertainment
›
Cine News
›
A.R.Rahman completes the task | செம்மொழி மாநாட்டுப் பாடல் –முடித்தார் ரஹ்மான்!
ஜூன் மாதம் கோவையில் நடக்கவிருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய தமிழ் வாழ்த்த்துப் பாடலுக்கு இசையமைத்து ம...
ஜூன் மாதம் கோவையில் நடக்கவிருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய தமிழ் வாழ்த்த்துப் பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்று துவங்கும் அந்தப் பாடலை சமீபத்தில் கனிமொழி எம்பிக்கும் வைரமுத்துவுக்கும் போட்டுக் காட்டினாராம் ரஹ்மான்.
பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக இருவரும் பாராட்டியுள்ளனர். இந்தியாவுக்கு ஒரு வந்தே மாதரம் என்றால், தமிழர்களுக்கு இந்தப் பாடல் மொழிப்பற்றையும் இனப்பற்றையும் பறைசாற்றும் பாடலாக அமையும் என கனிமொழி கூறியுள்ளார்.
விரைவில் முதல்வர் கலைஞருக்கும் 'பிறப்பொக்கும்...' பாடலை போட்டுக் காட்டவுள்ளனர்
Comments
Post a Comment