Arya's reason behind villian avatar Varudu

http://www.southdreamz.com/wp-content/uploads/2008/05/actor-arya-new-look.jpg
‘வருடு’ தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார் ஆர்யா. இப்படம் நேற்று ரிலீசானது. இது பற்றி ஆர்யா கூறியதாவது: தமிழில் ஹீரோவாக நடிக்கும்போது, தெலுங்கில் வில்லனாக நடித்தது ஏன் என கேட்கிறார்கள். முதலில் நான் நடிகன். பிறகுதான் ஹீரோ. எனக்கு சவாலாக அமையும் வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். தெலுங்கில் நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் குணசேகர். அவர் ‘வருடு’ கதையை சொன்னதும் பிடித்திருந்தது. முக்கியமாக ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு இணையாக வில்லன் வேடம் இதில் இருந்தது. அதனால்தான் ‘வருடு’வில் அப்படி நடித்தேன். தமிழில் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘மதராச பட்டணம்’ ஷூட்டிங் முடியும் நிலையில் உள்ளது. ‘சிக்கு புக்கு’, ‘அவன் இவன்’ படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு ஆர்யா கூறினார்.

Comments

Most Recent