Bala's Avan Ivan in problems

http://img1.dinamalar.com/cini//CNewsImages/1945Bala.jpg
நான் கடவுள் படத்திற்காக தேசிய விருது பெற்ற டைரக்டர் பாலா, சூட்டோடு சூடாக அவன் இவன் பட வேலைகளில் இறங்கினார். ஆர்யா, விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நந்தா படத்துக்குப் பிறகு யுவனுடன் கைகோர்க்கிறார் பாலா. இந்தப் படத்தின் நாயகியாக ஜனனி அய்யர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியது. முந்தைய படங்களைப் போல அவன் இவனையும் இழு இழுவென இழுக்க மாட்டேன். முழு வீச்சில் இறங்கி விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வருவேன், என்று முழங்கிய பாலா, என்ன காரணத்தினாலோ திட்டமிட்டபடி சூட்டிங்கை நடத்தி முடிக்காமலேயே சூட்டிங்கிற்கு பேக்-அப் சொன்னார்.

இந்நிலையில் புதுத்தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலாவின் அவன் இவன் ட்ராப் ஆக வாய்ப்பிருக்கிறது என்பதுதான் அந்த தகவல். படத்தின் 2 ஹீரோக்களில் ஆர்யாவை விட விஷாலுக்கு குறைவான காட்சிகள்தானாம். இதனால் அவர் திரைக்கதையை மாற்றச் சொன்னதாகவும், எனக்கே அ‌ட்வைஸா? என சினம் கொண்ட பாலா, சூட்டிங்கை நிறுத்தி வைத்திருக்கிறாராம். அதே நேரம் விஷாலும் படத்தை விட்டு விலகி விட்டதாகவும் தகவல்.

Comments

Most Recent