வடிவேலு – சிங்கமுத்து ஆதரவாளர்கள் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டடுள்ளது. இந்த மோதலில் டைரக்டரின் மாமனார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ...
வடிவேலு – சிங்கமுத்து ஆதரவாளர்கள் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டடுள்ளது. இந்த மோதலில் டைரக்டரின் மாமனார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. வடிவேலுவுக்கு நிலம் வாங்கி கொடுத்ததில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து மீது வழக்கு வ்டிவேலு புகார் கூறினார். இதுதொடர்பாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவில் வடிவேலு அளித்த புகாரின்பேரில், சிங்கமுத்து விசாரிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சைதாபேட்டை நீதிமன்றத்தில் வடிவேலு வழக்கும் தொடர்ந்து உள்ளார். இந்தப் பிரச்சனைகளில் கடந்த சில வாரங்களாக அமைதி நிலவி வந்தது. இந்நிலையில் வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் வேதவள்ளி தெருவில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு எதிரே சினிமா டைரக்டர் கண்ணன் வீடு உள்ளது. கண்ணனுடைய மகளுக்கு கடந்த 7ஆம் தேதி பிறந்த நாள் விழா நடந்துள்ளது. இதில் நடிகர் சிங்கமுத்து கலந்து கொண்டுள்ளார்.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த சிங்கமுத்துவுக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பின்னர் இரவில் பார்ட்டியும் நடந்துள்ளது. சிங்கமுத்து பங்கேற்ற இந்த விழாவில் வடிவேலு பற்றியும் பேசியதாகவும், இதுபற்றிய தகவல் வடிவேலுவுக்கும் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டைரக்டர் கண்ணன் வீட்டில் நேற்று இரவு ஒரு கும்பல் புகுந்துள்ளது. அப்போது வடிவேலு பற்றி தரக்குறைவாக விமர்சித்தது ஏன் என்று கேட்டு அவர்கள் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது டைரக்டர் கண்ணன் மாமனார் செல்வம் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். செல்வத்தை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் டைரக்டரின் மாமனாரை தாக்கிய புகாரில் போலீசார் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
Post a Comment