ஜெயா டிவியின் சங்கீதப் போட்டியில் விசு

http://www.muthamil.com/jaya/images/visu.jpg
ஜெயா டிவியில் சின்ன சின்ன ராகம் எனும் நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இசைஞானம் உடைய பள்ளி மாணவ - மாணவிகளிடையே நடக்கவிருக்கும் பிரமாண்ட சங்கீதப் போட்டியான இந்நிகழ்ச்சியில் நாட்டுப்பாடல், கிராமியப் பாடல், ஆன்மீகப் பாடல் உள்ளிட்டவைகளை பாட வேண்டும், அவை தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை. இந்த போட்டியில் ஒரு பள்ளிக்கு 12 பிள்ளைகள் வீதம் 16 பள்ளிகள் கலந்து கொள்ள... அதில் இருந்து 8, 4, 2, 1 என்று வெற்றி பெற்ற பள்ளியும், மாணவ - மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. ஒரு சுற்றுக்கு 2 நீதிபதிகள் வீதம் மொத்தம் 8 நீதிபதிகள் அமர்த்தப்பட உள்ளனர். வர்கள் அனைவரும் சங்கீத வல்லுனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கம் இயக்குனர் விசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருப்பது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு!

Comments

Most Recent