கோடையில் கோலிவுட் மழை!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-840.jpg
ஐ,பி.எல் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதனையடுத்து கோடையில் கோலிவுட் மழை தொடங்கிவிட்டது. காரணம் மிகப்பெரிய படங்கள் ரீலிஸ் ஆகப் போகின்றன. விஜய், விக்ரம், சூர்யா மற்றும் ஜெயம் ரவி போன்ற கோலிவுட் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வரிசையாக வரப் போகிறது. தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களைப் பற்றி பார்போம்.

சுறா

விஜய் நடித்து, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் ‘வேட்டைக்காரன்’. மெகா ஹிட்டான இந்தப் படத்தை அடுத்து, விஜய் நடிக்கும் 50வது படம் ‘சுறா’. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். எஸ்.பி.ராஜகுமார் இயக்கியுள்ளார். ‘இயற்கை’, ‘கந்தசாமி’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மணிசர்மா இசை அமைக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ‘மகதீரா’ படத்தின் வில்லன், தேவ் கில் இந்தப்படம் மூலம், தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். மீனவ மக்களுக்காக போராடும் இளைஞனின் கதை. ஆக்ஷன் படமான இதில், சண்டைக் காட்சிகளில் விஜய் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து காமெடியிலும் விஜய் கலக்கியுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிதுள்ளது. விஜய்யின் 50வது படம் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுறா வருகிற 30ந் தேதி ரீலிஸ் ஆகிறது.

ராவணன்  


தமிழ் மற்றும் இந்தியில் மணிரத்தினம் தயாரித்து இயக்கும் படம் ராவணன். இதில் விக்ரம், பிருத்விராஜ், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், ப்ரியாமணி நடிக்கிறார்கள். ஜூன் 18-ல் தமிழ், இந்தி, தெலுங்கில் ‘ராவணன்’ படம் ரிலீஸாகிறது. தற்போது இடைவேளை வரையிலான ரீ&ரெக்கார்டிங் பணியை முடித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தமிழில் 'ஆயுத எழுத்து' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மே 14&ம் தேதி கேன்ஸில் நடக்கும் சர்வதேச பட விழாவில் இந்தி ‘ராவண்’ படம் திரையிடப்படுகிறது. இப்படத்துக்காக நான்கு கிளைமாக்ஸ் காட்சிகளை அவர் இயக்கி இருந்தார். இதில் இப்போது இரண்டை ஒதுக்கி வைத்துவிட்டார். மீதி இரண்டு மட்டுமே இப்போது வைத்திருக்கிறாராம். அதில் ஒன்றை படத்தில் பயன்படுத்த உள்ளாராம். இப்படத்துக்காக தமிழில் டப்பிங் பேச உள்ளார் ஐஸ்வர்யா ராய்.

சிங்கம்

பரபரக்க வைக்கிறது சூர்யாவின் சிங்கம் ஸ்டில்கள். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனில் பிசியாக இருக்கிறார் இயக்குனர் ஹரி. சிங்கம் அவ்வளவு சீக்கிரத்துல பாயாது. பாய்ஞ்சுதுன்னா, எதிராளிய காலி பண்ணிட்டு தான் வரும். அப்படியான கேரக்டர்தான் சூர்யாவுக்கு. சிங்கம் ஒரு அடி அடிச்சா, ஒன்றரைடன் வெயிட்டு இதுதான் படத்துல சூர்யா பேசுற பஞ்ச். விதவிதமான கோணத்துல சூர்யா தெரிவார். கிராமம், நகரம்,
மாநகரம்ங்கற மூμ ஏரியாவுல கதை பயணிக்கும். இதுதான், இப்படித்தான் இருக்கும்னு எந்த காட்சியையும் யூகிக்க முடியாத திரைக்கதை, படத்துக்கு பலமா இருக்கும் என்கிறார் ஹரி. சூர்யாவின் 25வது படம் என்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

தில்லாலங்கடி

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் தில்லாலங்கடி. தமன்னா, ஷாம், வடிவேலு என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எடிட்டிர் மோகன் தயாரிக்கும் படம் ‘தில்லாலங்கடி‘. இதன் படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்தது. பொழுதுபோக்கு, காமெடி, ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என எல்லா அம்சங்களும் சரிசம விகிதத்தில் கலந்த படம் இது.

மதராச பட்டினம்

‘மதராச பட்டினம்’ படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை காண்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய். அந்த காலத்து சென்னை எப்படி இருந்தது என்பதை, பழைய சென்ட்ரல் மற்றும் மவுண்ட்ரோடு ஆகியவற்றை அரங்குகள் மூலம் தத்ரூபமாக அமைத்திருக்கிறார் வி.செல்வகுமார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் நா.முத்துக்குமார் பாடல்களை எழுதி உள்ளார். வித்தியசமான முயிற்சியுடன் தமிழ் சினிமா எட்டப்படாத மைல்கல்களை எட்டியுள்ளது படம் இது. தமிழ் சினிமாவிற்கு பெருமையை மதராச பட்டினம் ஏற்படுத்தி கொடுக்கும் என உலக நாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கரின் வார்ததைகள் காரணமாக மிகுந்த எதிர்பர்£ப்பை ஏற்படுததியுள்ளது.

Comments

  1. டாஸ்மாக் சரக்குடா... என்னை பக்குவமா கலக்குடா...!
    Meghna Naidu with an item number for Puli Vesham‎
    வீராசாமி, வைத்தீஸ்வரன் படங்களுக்கு பிறகு பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ரவுண்டு கட்டி அடித்து வரும் கவர்ச்சிப் புயல் மேக்னா நாயுடு சமீபகாலமாக தமிழ் சினிமா பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் இருந்து வந்தார். அம்மணியை அடையாளம் கண்டு மீண்டும் அழைத்து ‌வந்திருக்கிறது கோடம்பாக்கம்.

    ஆர்.கே. வேர்ல்ட் தயாரிக்க, தொழிலதிபர் ஆர்.கே., கார்த்திக், சதா, திவ்யா விஸ்வநாத், மன்சூர் அலிகான், இளவரசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே பி.வாசு இயக்கத்தில் நடிக்கும் புலிவேஷம் படத்திற்காகத்தான் மேக்னா மீண்டும் கோடம்பாக்கம் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அதுவும் ஒத்தப் பாட்டுக்கு குத்து டான்ஸ் ‌போட இருக்கிறார் மேக்னா. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், கவிஞர் அண்ணாமலை எழுதியிருக்கும் டாஸ்மாக் சரக்குடா... என்னை பக்குவமா கலக்குடா... எனத் தொடங்கி தொடரும் பாடலுக்கு 20 லட்சம் செலவில் ஏவி.எம்.மில் செட் போட, மேக்னா டூ பீஸ் உடையில் ஆடி அசத்தியிருக்கிறாராம்.

    ReplyDelete

Post a Comment

Most Recent