அள்ளித் தந்த நயன், அமைதியாகத் திரும்பிய நிருபர்கள் - ஒரு கர்நாடக கலகல..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னக மொழிகளில்  பட்டையைக் கிளப்பிவிட்டார்  நயன்தாரா. இப்போது முதல்முறையாக கன்னடப் படத்தில் உபேந்திரா ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்போதைக்கு ‘கிச்சகா’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்தப்படத்தின் பத்து விழுக்காடு காட்சிகள் மட்டும் பெங்களூரில் நடப்பது போல கதை. எஞ்சிய மொத்த கதையும் லண்டனில் நடக்கிறது.

தமிழில் நயந்தாரா உச்சத்தில் இருந்தபோது போக்கிரி படத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 70 லட்சமாம்.  இப்போது கிச்சகா படத்துக்காக 60 லட்சம் சம்பளம் கொடுத்து இருக்கிறார்களாம் அவருக்கு. இதுவரை திவ்யா ஸ்பாந்தனா கூட  அங்கே வாங்காத சம்பளமாம் அது! கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதிவரை கிச்சகா முதல் நாள் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியபோது அன்று காலையிலேயே சுமார் முப்பது கன்னட சினிமா நிருபர்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்து விட்டார்கள்.
 வேறு வழியில்லாமல் அங்கேயே பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடாகியிருக்கிறது. மேக்கப்பில் இருந்த நயன் “அரைமணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு காராவேனுக்குள் நுழைந்தவர் தனது உதவியாளரை அழைத்து ஏதோ சொல்லியிருக்கிறார்.
அவர் வந்து எல்லா நிருபர்களின் பெயரையும் எழுதி வாங்கிக்கொண்டு போனவர் அடுத்த 15 நிடத்தில் நயந்தாராவின் அழகிய படமும் “என்றும் உங்கள் உங்கள் அன்புத் தோழி” என்று அச்சிடப்பட்ட கவர்களோடு திரும்பிவந்து எல்லோருக்கும் விநியோகித்திருக்கிறார்.
கவரை வாங்கி ஆவாலோடு பிரித்த நிருபர்களுக்கு இன்ப அதிர்ச்சி. உள்ளே தாலா மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். “ நயன்.. நயன்தாப்பா” என்று சந்தோஷத்தோடு நிருபர்கள் காத்திருக்க, காராவெனிலிருந்து இறங்கி வந்த நயன், “ எவ்வளவு சர்ச்சையில் சிக்கிய போதும் நான் மீடியாவை கண்டு, பத்திரிகை நண்பர்களைக் கண்டு ஓடி ஒளிந்தவள் இல்லை.
நீங்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள். நல்ல சந்தர்பம் அமையும்போது நானே உங்களைக் கூப்பிட்டுச் சொல்கிறேன்.'' என்று அன்புக்கட்டளைப் போட கவரை வாங்கிய அத்தனை நிருபர்களும் அமைதியாக பொதுவான கேள்விகளை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆனால் கவரை வாங்காத முன்னனி கன்னட நாளிதழின் நிருபரும், இன்னும் சில நிருபர்களும் பிரபுதேவா என்று ஆரம்பித்ததும் “ நீங்கள் கேட்க விரும்ப பர்சனல் கேள்விகளை பட்டியலிட்டு... நயந்தாரா பதில்தர மறுத்த கேள்விகள் அப்படின்னு போடுங்க” உங்களுக்கும் நியூஸ் கிடைச்சமாதிரி ஆயிடும்” என்று நயந்தாரா சொல்ல “ அது எங்களுக்குத் தெரியும் “ கோபமாகச் சொல்லிவிட்டு போனவர்கள் வந்தவரைக்கும் லாபமென்று திரும்பி வந்து கவரை வாங்கிகொண்டு போய்விட்டார்களாம்.
நயன்தாரா பெங்களூரில் படப்பிடிப்பில் இருந்த 10 நாட்களும் தினசரி நிருபர் கூட்டம் அங்கே வந்து இளைப்பாறிய படியே சென்றதாக தகவல் கிடைக்கிறது நயந்தாரா வட்டாரத்திலிருந்து. நயன்தாராவுக்கு "கவர்தாரா" என்றொரு விருதையும் கொடுக்கலாம் போலிருக்கிறது.

Comments

Most Recent