Vijay setting ready for next !! தாடி வைக்கத் தயாராகிறார் விஜய்!

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/Vijay.jpg
எந்திரன் படத்தின் செய்திக்கு கூட கோடம்பாக்கத்தில் இத்தனை டிமாண்ட் இருக்கும் என்று சொல்ல முடியாது. தல அஜித்தும், தளபதி விஜயும் அடுத்து நடிக்க இருக்கும் படம் பற்றிய செய்திக்கே ஆளாய் பறக்கிறது நிருபர் பட்டாளம்.
ஐரோப்பாவிலிருந்து இன்னும் சென்னை திரும்பாத அஜித், அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு விட்டதாகவும், அந்நிய தேசத்திலிருந்து தொலைபேசி வழியே இயக்குனர் வெற்றிமாறனை தொடர்புகொண்ட அஜித், தனக்கு ஒரு கதை தயார் செய்து வைக்குமாறு சொல்லியதாகவும் கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் அதேநேரம் விஜயின் அடுத்த படம் குறித்து விஜய்க்கு நெருக்கமான உதவி இயக்குனர் வட்டாரத்தில் இருந்து நமக்கு கிடைக்கிறது ஓர் ஆச்சர்யமான தகவல்! காவல்காரன் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க இருப்பது 3 இடியட்ஸ் ரீமேக்கில். இந்தப்படத்துக்காக விஜய் முதல்முறையாக தாடி வளர்க்க இருக்கிறார். தாடியுள்ள இளைஞராக விஜய் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பதுதான் அந்த ஸ்கூப் தகவல்.

3இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் தற்போது இயக்குனராக யாரை நியமிப்பது என்பதில் பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக பந்து, உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் சக்ரியின் கையில் தரப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் விஜயின் அடுத்தப் படத்தை நான்தான் இயக்குகிறேன் என்று ஜெயம்ரவியும், இல்லை நான்தான் இயக்குகிறேன் என்று பேரரசுவும் நட்பு வட்டத்தில் சொல்லி வருவதாக தகவல்கள் வளைய வருகின்றன. யார் வேனாலும் விஜய இயக்குங்க சாமிகளே! ஆனா இந்த பேரரசுகிட்ட மட்டும் விஜய மாட்டி வெச்சுராதீங்க.

அப்பறம் விஜய் படத்தப் பார்த்து திரையரங்குல நிஜமாவே உயிரிழப்பு ஏற்பட்டாலும் ஏற்படும்! தளபதி படத்தப் பார்த்து தமிழன் நாண்டுகிட்டு செத்தான்கிற அவப்பெயர் வேணுமா விஜய்? பேரரசுன்னா நீங்களும் கொஞ்சம் யோசிங்க மிஸ்டர் விஜய்!

Comments

Most Recent