ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு : லண்டனில் குஷ்பு, ஆர்யா தவிப்பு!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-852.jpg
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘சிக்குபுக்கு’ படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்கிற்காக, லண்டன் சென்றிருந்த ஆர்யா, ஸ்ரேயா மற்றும் படப்பிடிப்புக் குழுவினர், திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். லண்டனில் இருந்து வேறொரு நாடு சென்று, அங்கிருந்து இன்று அல்லது நாளை சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் ஆர்யா.

லண்டன் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சுவிட்சர்லாந்தில் நடக்கும் தெலுங்கு ‘டான் சீனு’ படப்பிடிப்பில் ரவி தேஜாவுடன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார் ஸ்ரேயா. விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், காரில் 10 மணி நேரம் பயணம் செய்து, சுவிட்சர்லாந்து சென்று, படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஸ்ரேயா. தன் மகள்கள் அவந்திகா, அனந்திகாவுடன் கோடை விடுமுறையை கழிக்க லண்டன் சென்றிருந்தார் குஷ்பு. இப்போது அங்கிருந்து சென்னை திரும்ப முடியாமல் தவிக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி கூறுகையில், “நானும் ஞாயிறன்று லண்டன் செல்ல திட்டமிட்டேன். விமானப் போக்குவரத்து இல்லாததால், அங்கு செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டேன். ஓரிரு நாளில் குஷ்புவும், மகள்களும் சென்னை திரும்புவார்கள்” என்றார்.

Comments

Most Recent