வேட்டிக்குள் நுழைந்த எறும்பை நசுக்கி எறிய வேண்டியதுதான்- வடிவேலு பதிலடி

http://thatstamil.oneindia.in/img/2010/04/12-vadivell200.jpg
வேட்டிக்குள் எறும்பு நுழைந்து விட்டது. அதை நசுக்கித் தூக்கி எறிய வேண்டும் என்று சிங்கமுத்துவை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நடிகர் வடிவேலு.

சிங்கமுத்து, வடிவேலு மோதலால் கோலிவுட் கலகத்துக் கிடக்கிறது. இருவரும் மாறி மாறி புகார் கூறி பேட்டி அளித்து வருகின்றனர்.

என்னுடைய பாவம் வடிவேலுவையும், அவரது பரம்பரையையும் சும்மா விடாது என்று சாபம் விட்டுள்ளார் சிங்கமுத்து. இநத நிலையில் வேட்டிக்குள் புகுந்து எறும்பு என்று சிங்கமுத்துவை மறைமுகமாக சாடியுள்ளார் வடிவேலு.

கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. வடிவேலு முதல் பிரதியை வெளியிட, விவேக் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், வடிவேலு பேசுகையில்,

நானும், விவேக்கும், கருணாசும் நிறைய படங்களில் கூடி கும்பமியடித்திருக்கிறோம். இப்போது தனித்தனியாக சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. மக்கள் எப்போதும் டென்ஷனோடு அலைகிறார்கள். மாலையில் வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தோடு பார்த்து சிரிப்பது எங்கள் நகைச்சுவை காட்சிகளைத்தான்.

நகைச்சுவை சேனல்கள் மக்களுக்கு ரிலாக்சை கொடுக்கிறது. எனக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அது வேட்டிக்குள் நுழைந்த எறும்பு மாதிரி நசுக்கி தூக்கி எறிய வேண்டியதுதான் என்றார் வடிவேலு.

Comments

Most Recent