என் பாவம் வடிவேலுவையும் அவர் பரம்பரையையும் சும்மா விடாது! - சிங்கமுத்து சாபம்

http://thatstamil.oneindia.in/img/2010/04/12-singamuthu3-200.jpgசினிமாவை மிஞ்சுமளவுக்குப் போய்விட்டது வடிவேலு - சிங்கமுத்து விவகாரம். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி வழக்குத் தொடர்ந்து கொண்ட இவர்கள், இப்போது சாப யுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று சிங்கமுத்துவுக்கு சாபம் கொடுத்தார் வடிவேலு. அடுத்த சில மணி நேரத்தில் சென்னை பிரஸ் கிளப்பில் வைத்து வடிவேலுவுக்கும் அவர் பரம்பரைக்கும் சாபம் தந்துள்ளார் சிங்கமுத்து.

"வடிவேலு கொடுத்த புகார், தொடர்ந்துள்ள வழக்குகளின் அடிப்படையில் எனக்கு தண்டனை கிடைத்தால், அந்தப் பாவம் வடிவேலுவை மட்டுமல்ல, அவர் பரம்பரையை எத்தனை தலைமுறை ஆனாலும் சும்மா விடாது", என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.

மேலும் அவர் கூறுகையில், "எனது வளர்ச்சியும், என் மகனின் வளர்ச்சியும் வடிவேலுக்குப் பிடிக்கவில்லை. அதனால் என் மீது பொய்யான புகார்களை கொடுத்து, ஜெயிலுக்குள் தள்ள முயற்சிக்கிறார்.

உண்மையில் கண்ணன் வீட்டில் வெடிக்கப்பட்ட பட்டாசு எனக்காக அல்ல. நடிகர் ஆனந்தராஜுக்காகத்தான்.

ஆனால், வடிவேல் என் மீது பொய் புகார் கொடுத்து இருக்கிறார். என் மீது அவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவைப்பதற்காக நான் மிரட்டுவதாக அவர் பொய் சொல்கிறார்.

அவர் என் மீது அடிக்கடி பொய் புகார் கொடுப்பதால் என் மனைவி, மகன் ஆகியோருக்கு மிகுந்த மன உளைச்சள் ஏற்பட்டுள்ளது. என்னை ஒரு மோசடி பேர்வழி மாதிரி சித்தரிக்கிறார். வடிவேலுவை, மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவனே, நான்தான். ஆனால், அவர் நன்றி மறந்துவிட்டார். என் தொழிலைக் கெடுக்கப் பார்க்கிறார்.

வடிவேலுவிடம் மானேஜராக இருந்த வேலுசாமி மரணம் அடைந்தபின், நான் வடிவேலுவின் அலுவலகத்துக்கு போகாமல் ஒதுங்கி இருந்தேன். ஆனால், என் மீது நில மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து, என் நிம்மதியை கெடுத்து விட்டார்.

அவர் அடிக்கடி எனக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று கூறுகிறார். தண்டனையை அவர் எனக்கு கொடுக்க முடியாது. தண்டனை கொடுக்கும் உரிமை கோர்ட்டுக்குத்தான் இருக்கிறது.

வடிவேலுவை மன்னிக்க தயார்....

அவருக்கு ஆதரவாக பல பெரிய ஆட்கள் இருக்கிறார்களாம். அந்த பெரிய ஆட்கள் யார் என்று எனக்கு தெரியாது. அந்த பெரிய ஆட்கள் எங்கள் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வந்தால், நான் சமாதானமாக போக தயார்.

ஆனால், வடிவேல் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிங்கமுத்துவை தவறாக புரிந்துகொண்டு புகார் கொடுத்து விட்டேன் என்று அவர் வருத்தம் தெரிவித்தால், அவரை நான் மன்னிக்க தயார்.

நான் தேவாரம், திருவாசகம் சொற்பொழிவு ஆற்றுகிற ஆன்மிகவாதி. அடுத்தவர்களை கெடுக்க எனக்குத் தெரியாது. பொய் புகார் கொடுப்பது, என் ரத்தத்தில் இல்லை.

வடிவேலுவின் பொய் புகாரால் ஒருவேளை எனக்கு தண்டனை கிடைத்தால், அந்த பாவம் அவரையும், அவருடைய பரம்பரையையும் எத்தனை தலைமுறையானாலும் சும்மா விடாது..." என்றார் சிங்கமுத்து ஆவேசமாக.

Comments

Most Recent