புதுப்படங்களை திரையிடும் தொலைக்காட்சிகளின் வரிசையில் தனது கேப்டன் டி.வி.,யையும் இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் நடிகரும், அரசியல் ...

புதுப்படங்களை திரையிடும் தொலைக்காட்சிகளின் வரிசையில் தனது கேப்டன் டி.வி.,யையும் இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த். நடிகர் விஜயகாந்தின் கேப்டன் டி.வி., வருகிற ஏப்ரல் 14ம்தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறும் கேப்டன் டி.வி., செயல் தலைவர் எல்.கே.சுதீஷ், மேலும் மற்ற சேனல்களுக்கு இணையாக புது திரைப்படங்களை வாங்குவதற்காகவே பெரும் தொகையை ஒதுக்கியிருக்கிறதாம் கேப்டன் டி.வி. புதுப்படங்களின் சேனல் உரிமையை பெற்று அந்த படங்களுக்கான உரிய விலை கொடுத்து வாங்குவோம் என்று சொல்லும் கேப்டன் டி.வி., தரப்பு இப்போதே புதுப்படங்களுக்கு விலைபேசும் வேலையையும் தொடங்கியிருக்கிறதாம்.
Comments
Post a Comment